விந்தைகளும் நிகழும்

​சாய்ந்து ​நின்றாலும்
​ஆய்ந்து அறிகின்ற
கூர்ந்து நோக்கிடும்
பார்வை தெரிகின்றது !

ஆளப்போகும் சமூகத்தை
ஆழமாக அளக்கின்றதோ
அசையாத விழிகொண்டு
அறிந்திடத் துடிக்கிறதோ !

வளரும் தலைமுறைக்கு
​கிளர்ந்தெழும் எண்ணங்கள்
உருவாக்கும் மாற்றத்தை
உலகிற்கும் பயன்பெறும் !

சிந்திக்கும் ஆற்றலால்
சிந்தையும் தெளிவுறும்
விந்தைகளும் நிகழும்
வியந்திடும் அளவிற்கு !


​பழனி குமார் ​

எழுதியவர் : பழனி குமார் (9-Nov-17, 9:17 am)
பார்வை : 618

மேலே