மொழிப் பெயரால் நாடாம்

(நேரிசை ஆசிரியப்பா)

பிரான்சு ஜெர்மன் பின்லாந்த் கிரீக்அரப்
பிறதே சமெல்லாம் நாடுமொ ழிபெயரில்
ஆலண்ட் ஸ்காட்லான்ட் அவரின் மொழிப்பேர்
போலன்ட் டச்சும் அவரின் மொழிப்பேர்
சைனா ஜப்பான் அவரின் மொழிப்பேர்
அவரவர் மொழியில் அவரின் தேசமாம்
மலேயா தாய்லாந் அவரின் மொழிப்பேர்
சகலதே சமும்மொ ழிப்பே ராலே
மொழிவா ரிஉலக நாடாம்
மொத்தமும் எழுதவி டம்கொள் ளாதே

மணிப்பூர் நாட்டில் மணிபூரி மொழியே
பூட்டான் நாட்டில் பூட்டான் மொழியே
நேபாள் நாட்டில் நேபாள மொழியே
பெங்கால் நாட்டில் வங்காள மொழியே
மராத்தி குஜராத்தி அசாமிரா ஜஸ்தானி
மறவா நாடுக்கு மொழிப்பேர் வைத்தார்
மலைநாடு மலையாளம் துளுநாட் டில்துளு
ஆந்திரம் ஆந்தரர் கர்நாடுக் கன்னடம்
வெளுத்தது தமிழனுக் குப்பா லாம்சொல்
வெள்ளையன் சரித்திரத் தில்திரா விடனென
வெள்ளந் தியாய்அது நான்என்றத் தமிழன்
வெள்ளையர் சொல்ல எவனும் நம்புவன்
மொழிவா ரிஇந்திய நாடாம்
மொத்தத் திலேமாந் தார்யார்? தமிழனே!

--- ராஜப் பழம் நீ ( 09-Nov-2017)

எழுதியவர் : பழனி ராஜன் (9-Nov-17, 12:48 pm)
பார்வை : 246

மேலே