உணர்வாயா ஒருமுறை
![](https://eluthu.com/images/loading.gif)
என் நிழலே
எனைத் துரத்தி
தனியே சென்றது.
சென்றாள்அவள்..
தொடர்ந்தேன்...
தொடாமலே கொன்றாள் எனை..
காதலியா நீ இருந்த
கண்ணால வலவிரிச்ச
பலவேஷம் போட்டு என்ன
பாதாளத்துலஅடச்சி வச்ச
ஏன்டி வந்த எனக்குள்ள
உன்னால் வாழ்வே தனிமை ஆனதடி
உணர்ச்சிகளெல்லாம்லாம் எனைத்தாக்க
என்கையே கத்தி ஆனதடி
வரவேற்க நீ வருவாயென
வாசலிலே காத்துக்கிடந்தேன்
வந்து நீயாரென்று கேட்ட
அவ்வார்த்தை வாழ்வை மாற்றுதடி
பிரிவுகளெல்லாம் நிரந்தரம் அல்ல
உணர்வாயா ஒருமுறை
உணர்ந்து நீ ஒருமுறை பார்ப்பாயென
எதிர்பார்க்கும் என்கல்லறை.