குறுங்கவிதைகள் II

பணம்

நாம் மதிப்பிட்டு படைத்த ஒன்று
இன்று
நம்மையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும்
ஒரு போலி தலைவன் - பணம்


வீடு

ஒரு நாட்டின்
செல்வ-பஞ்ச நிலைகளை
எடுத்துச்சொல்லும்
ஒரு சிறிய இடம் - வீடு


முத்தம்

அன்பு மகிழ்ச்சியின் வெளிப்பாடாய்
உயிர்களிடத்தில் இருக்கும்
ஓர் உன்னத பகிர்மானம்
முத்தம்.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (11-Nov-17, 3:27 pm)
பார்வை : 2095

மேலே