கிராமத்துக் காதல்
என் தேசம் வாடுதே!
*******************
தூரலிடும் வானம்
மரங்கள் துளிர்விடும் நேரம்
சேறுகளோடு சாலைகளும் வாடும்
கிராமம் போல!
காதலோடு நானும்
காத்திருக்கும் நேரம்~நீ
கானலாகப் போனால் இந்த
இதயமும் வாடும்!
விவசாய நிலத்தில்
வந்தமர்ந்தக் கட்டிடமாய்
மரத்தின் உச்சி மண்ணுக்கு~ முத்தமிட்டு
வீழ்ந்துக் கிடப்பைதைப் போல்!
நீ இல்லாத என் இதயத்தில்
கவலைகள் வந்தமர! கண்ணீரும்!
மண்ணுக்கு முத்தமிடுதே!
ரா ஸ்ரீராம் ரவிக்குமார்