ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள் -3
![](https://eluthu.com/images/loading.gif)
• நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
• கூடையிலிருந்து
கொட்டும் பூவாய்க்
கொட்டுகிறது
என் ஆசைகள்
• காதலைத் தரிசிக்க
இறைவன்
நம்மைத் தேடி வருகிறான்
• காதல்
ஒரு பல்லாங்குழி விளையாட்டு
அதில் நீ என்னைக்
குழிப்பறித்தாய்
• என் காதலை
நான் வாங்கிக்கொடுத்த
ரோஜாத் தொட்டியிலேயே
குழித்தோண்டிப் புதைத்துவிட்டாய்
• நான்
உன் நினைவோடு
தொலைந்துபோனத்
திருவிழாக் குழந்தை
• எல்லாப் பெண்களும்
ஒரே மாதிரிதான்
அன்புகாட்டிக் ‘கொல்’வதில்
• உன் முகம் போன்ற
அழகு ஓவியம்
இவ்வுலகில்
வேறெங்கும் இல்லை