மதி ப் பெண்

மதி (ப்) பெண்

நான் உனக்கு பாரம் என்றேன்
நீயே எந்தன் துலாபாரம் என்றாள்

நான் உனக்கு சுமை என்றேன்
நான் உந்தன் சுமைதாங்கி என்றாள்

என்னிடம் மதி இல்லை என்றேன்
நீயே எந்தன் நிம்மதி என்றாள்

என்னிடம் வேகம் இல்லை என்றேன்
நீயே எந்தன் விவேகம் என்றாள்

என்னிடம் பொன் இல்லை என்றேன்
நீயே எந்தன் ஐம்பொன் என்றாள்

என்னிடம் அதிக வருமானம் இல்லை என்றேன்
நீயே கடவுள் எனக்கு தந்த சன்மானம் என்றாள்

பெண் தான் உலகி ன் சிறந்த மதிப்பெண்
ஆண் வாழ்வை உறுமாற்றும் ஸெட்ன் கன்

எழுதியவர் : ராரே (15-Nov-17, 9:05 am)
பார்வை : 643

மேலே