உரிய உரிய வளர்ந்து கொண்டே போனது ஆடை

திரௌபதியைத் துகிலுரித்தான்
துச்சாதனன்
ஆடை வழங்கினான் மானம் காக்க
கண்ணன்
உரிய உரிய வளர்ந்து கொண்டே போனது
ஆடை
உரிந்து உரிந்து சோர்ந்து விழுந்தான்
துச்சாதனன்
நூறு பேருக்கு இது அதிகம்தான் என்று
தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்
அரண்மனை விதூஷகன் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Nov-17, 5:34 pm)
பார்வை : 102

மேலே