ரௌத்திரம் பழகு

அக்னி பிழம்பும்
அனல் கக்க
சிறுபொறி வீழ்ந்தனவே -யாம்
இங்கு ரௌத்திரம்
பழகினோம் பாரீர் !
சின்னஞ்சிறு துகள்
வீசி எறிய
வீறிட்டு எழுந்தோம் !
வீர மண்ணில் - ஆரியத்தை
வேரூண்ற நினைத்தவனை
சண்டையிட்டு மண்டியிட
வைத்திடுவோம் வாரீர் !