அன்னத்தின் நடையழகு
நடையழகில் அன்னத்தை ஒப்பிடுவோம் சிறப்பாக
நதியழகில் நீந்துகின்ற வெண்ணிலவைப் போன்றவளே
மதிமுகத்தாள் காண்பாளோ உன்னெழிலை இக்கோலம் .
விதியாலே பிரிந்தேனே தனிமையிலே வாடுகின்றேன் !
துணையாக வருவாயோ ! தூயவளே ! தூதாகி !
இணையாக என்னவளை என்னுடனே இணைப்பாயோ !
பஞ்சுநிகர் வெண்ணிறமே பாசமுள்ள உடன்பிறப்பே !
கொஞ்சிடுவேன் கோதையென கோமகளை நினைத்தேங்கி !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்