முத்தத்தின் வகைகள்-கங்கைமணி

ஈர இதழோடு கன்னத்தில் ஒத்தடம் -குழந்தையின் முத்தம்
கண்கள் மூடி கன்னம் வாங்கும் -பிள்ளைகள் முத்தம்
உச்சி முகர்ந்து நெற்றியில் பதியும் -பாச முத்தம்
பின்னால் இருந்து கன்னம் திருப்பும் -ஆசை முத்தம்

கண்ணீர் வழிய இணையும் இதழ்கள் -பிரிவின் முத்தம்
நெருங்கும் நினைவில் இதழின் நெளிவில் -கனவு முத்தம்
நிலைப்படி நெருங்கி..கண்கள் சொருகி.. -மயக்க முத்தம்
பார்வை நிலைக்கும் ,இதழ்கள் அனுப்பும் -பறக்கும் முத்தம்

இதழ்கள் இணையும். பார்வை எங்கோ விரையும் -வஞ்சக முத்தம்
மிரளும் கண்கள்.,ஓலக்குரல்கள் -கட்டாய முத்தம்
கன்னம் அறைந்து,கழுத்தை வளைக்கும்.-உரிமை முத்தம்
இறுகும் பொழுது இதழின் சத்தம் -நேச முத்தம்

யுத்தம் நடத்த,கன்னத்தில் ஒத்திகை - கணவனின் முத்தம்
இதழும் இதழும் எடுத்துத்தின்னும் -இல்லற முத்தம்
கன்னம் தவிர்த்து கண்ட இடத்தில் -மோக முத்தம்
கன்னம் தடவி கண்கள் அழைத்து நெற்றியில் பதியும் -நிறைவு முத்தம்

உடலை தளர்த்தி உணர்வை நெகிழ்த்தி -
உயிரை உயிலாய்..இதழ்கள் எழுதும் -காதலர் முத்தம்
மொத்தத்தில்.....
உணர்ச்சிகளின் உன்னத மொழியே முத்தம்"
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (17-Nov-17, 12:35 am)
பார்வை : 307

மேலே