காதல்

நீ டியுசன் வந்து நோட்ஸ்
எடுத்து செல்கிறாய்
நான் உன்னையே நோட்டம் விட்டு செல்கிறேன்
...................................…..............................
எத்தனை அழகானதாய் பொருள் இருந்தாலும் உன் அருகில் வரும் போது சற்று சுமாராகத்தான் தெரிகிறது
...................................................................
நீ பூ பறிக்கிறாய்....
ஒரு பூவே
பூ பறிப்பதை
வியப்பாய் பார்கிறேன் நான்...
...................................................................
நீ செடிக்கு தண்ணீர் ஊற்றுகிறாய்...
பார்த்து
ஜொல்லு ஊற்றுகிறேன்...
நான்
...................................................................
உலகத்திலேயே அழகானது குறிஞ்சி மலராம்...
அவர்களுக்கு என்ன தெரியும்...
நீ சிரிப்பதை தான் அவர்கள் பார்த்தது இல்லையே....
...................................................................
நீ வீட்டு கணக்கு செய்கிறாய்...
நான் வீட்டில் உன்னையே கணக்கு செய்கிறேன்

எழுதியவர் : நவின் (20-Nov-17, 11:53 am)
சேர்த்தது : Vijay Navin
Tanglish : kaadhal
பார்வை : 275

மேலே