கம்பன் ஏமாந்தான்

பார் போற்றும் கம்பனும் யானோ
உனைப்போற்றிப் பாடிட வந்தேன்

என் வீட்டுக் கட்டுத் தறியை கவிபாட
வைத்தவள் நீயோ..

கார்மேக கூந்தல் அழகோ
கயல்விழியாம் கண்கள் அழகோ

கலைமானின் நடைதான் அழகோ.
உடுக்கை வடிவில் இடைதான் அழகோ

இசை பாடும் குரல்தான் அழகோ
யாழ் மீட்டும் விரல்தான் அழகோ

பிரம்ம தேவன் சிரமம் கொண்டு
செதுக்கி தந்த சிலைதான் நீயோ

ராமன் தேடும் சீதை நீயோ
உன் ராமன் எவனோ எவனோ

உன் மீது காதல் கொண்ட
வாலிபனின் தூதுவன் நானோ

எழுதியவர் : (20-Nov-17, 11:00 am)
சேர்த்தது : Sreejith
பார்வை : 204

மேலே