காதல் கருவுற்றது இதயம் இன்புற்றது

ஏன் பிறந்தோம்?
எதற்கு வளர்ந்தோம்?
எப்படி மலர்ந்தோம்?
இவ்விடை யறியாமல்தான் திரிந்தோம்..!!
ஆயிரம் வண்டினம் அருகிலே பூவினம்
சேர்ந்தவர் ஓரினம் ஏங்குதே நம்மனம்
மலர்தேடி திரிந்த வண்டும்
வண்டுக்காக பூத்த பூச்செண்டும்
சந்தித்தவேளை இதோ,
அன்றொருநாள் அந்திப்பொழுது அலைப்பேசி அழைத்தது
அதில் ஆசைமழையொன்று அன்பை அள்ளித் தெளித்தது
உருகும் உள்ளம் உன் உருவம் பார்க்க துடித்தது
உயிரின் பார்வை என் உதிரம் வரை துளைத்தது
அந்த கழுகுப் பார்வைப்பட்டதால்,
காதல் கருவுற்றது.. இதயம் இன்புற்றது..
உறவும் வலுப்பெற்றது.. விடையும் அகப்பட்டது..
அன்றுணர்ந்தோம்..!! விடையறிந்தோம்..!!
நமக்காகத்தான் நாம் பிறந்தோம்
நமக்குள் காதல் என்றுணர்ந்தோம்
உணர்ந்தால் மட்டும் போதாது
நம் உருவம் தனித்து வாழாது
ஆழ்கடல் அலையும் ஓயாது
அதுபோல் அன்பும் தேயாது
அடைகாத்த நம் ஆசைகளுக்கெல்லாம்
விடைகாணும் நாள் எப்போது ??..
அன்பே.. நம்மணநாள் எப்போது?
......................................அருணன் கண்ணன்.....................

எழுதியவர் : அருணன் கண்ணன் (24-Nov-17, 2:46 pm)
பார்வை : 110

மேலே