அவள் ஒரு மேனகை
அவள் நாணும் போதெல்லாம்
அவள் முகம்
செவ்வானம் போல்
சிவந்து பூமியையே பார்க்கிறது...
கடுமையான வெய்யிலிலும்
என் தேகம் குளிர்ந்து
மனதுக்குள் மழைப்பெய்கிறது
அவளின் ஒற்றை பார்வையால்...
இதயம் சுருங்கி விரிகிற
நொடிகளில் கூட
அவளின் நினைவு மட்டும்
என்னுள் சுருங்குவதே இல்லை...
அரைத்தால் தான்
மணம் வீசும் சந்தனக்கட்டை
அவள் அருகில் வந்தாளே
மணம் வீசும் மல்லிகை மெத்தை...