மனிதம்

மனிதம்

மதத்தை திணிக்கும் போது அனைவருக்கும் பிடிப்பது மதம்
மதத்தை தமக்குள்ளே நேசிக்கும் போது வளர்வது மனிதம்

மனிதம் பெருகும் போது நம்மில் வருவதோ பெருமிதம்
பெருமிதம் அடையும் போது நமக்கு எம்மதமும் சம்மதம்

சம்மதம் என்று எண்ணும் போது நம் மனது ஆவதோ இதம்
இதமாய் உணரும் போது, நாம் அடைவதோ ஏகாந்தம்

ஏகாந்தம் அடைந்தவுடன் நமக்கு அறியாமல் வருவது புளகாங்கிதம்
புளகாங்கிதம் ஆனவுடன் நம்மனம் கேட்கும் கேள்வி இனி எவ்விதம்

எவ்விதம் என ஆராயும் போது நம்மனம் பக்குவப்படும் பலவிதம்
பலருடன் சமாதானமாய் பழகும் போது நமக்கு கிடைக்கும் சுகிர்தம்

சுகிர்தத்தை பகிர்ந்து நாம் இயங்கும் போது அடைவோம் உன்னதம்
உன்னதமாய் இவ்வுலகில் வாழும் போது நாம் போடுவோம் சதம்

சதம் அடித்தபின் நாம் அடைய முயல்வோம் பரமன் பதம்
பரமனின்பதம் கிடைக்கச் செய்வது நம்மில் வாழும் மனிதம்

வாழ்க மனிதம்

ராரே

எழுதியவர் : ராரே (27-Nov-17, 8:04 am)
சேர்த்தது : ராரே
Tanglish : manitham
பார்வை : 88

மேலே