கடவுள் உண்டா இல்லையா
உண்ணும் உணவை ஏழு தாதுக்களாக மாற்றும் அதிசயத்தை புரிபவர் யாரென்று யோசித்தால் - இதற்கான விடை தெரிந்துவிடும். ஏழு தாதுக்கள்?
சாரம்: சுரப்பிகள் சுரக்கும் நீர்கள். இந் நிண நீர்கள் உடலையும் மனதையும் செம்மையாக வைத்திருக்க சுரப்பது.
2. இரத்தம்: உடல்முழுவதும் சத்துக்களையும் , பிராண வாயுவை எடுத்துச் சென்று வழங்கி, கழிவுகளை திரும்ப எடுத்து வருவது. அறிவு, வன்மை, ஒலி, ஒளி இவற்றை உடலில் நிலைத்திருக்க செய்வது.
3. தசை: உடலுக்கு உருவத்தையும்,அழகையும் , சரியான வடிவையும் , உடலியக்கத்திற்கும் எலும்புக்கும் ஆதரவாகவும் உள்ளது.
4.கொழுப்பு:உறுப்புக்களுக்கு சக்தியை வழங்கும் மிகு சேமிப்பு கிடங்கு இது,ஒரு வாரம் வரை உணவு வழங்கப்படாமல் இருந்தாலும் தான் கரைந்து உடலை நன்றாக அப்படியே வாடாமல் பார்த்துக் கொள்ளும். ஒவ்வொரு உறுப்பும் தத்தம் வேலையை செய்யும்பொழுது சுலபமாக இயங்க அவற்றிற்கு நெய்ப்பசை ஊட்டி உதவுகின்றது.
5. எலும்பு: உடலை கட்டாக நிறுத்தி வைப்பது இந்த எலும்புச் சட்டகம் தான் மென்மையான உறுப்புகளை பாதுகாத்தல் உடல் அசைவிற்கு அடிப்படையாக விளங்குதல் முதலிய செய்கைகளை செய்வது.
6. மஜ்ஜை: எலும்புக்குள் நிறைந்த இவைகள் இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது , மற்றும் எலும்பை வளப்படுத்துவது ,அதன் மூலம் உடலை பாதுகாக்க செய்வது.
7. சுக்கிலம்/சுரோணிதம்: கருத் தோற்றத்திற்கு முக்கியமாக இருந்து உடலுக்கு வன்மையை தருவது.ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையைத் தீர்மானிப்பதும் , பெண்களுக்கு கரு முட்டையைத் தோற்றுவித்தலைத் தீர்மானிப்பதும் இந்தத் தாதுவே. ஆண்களுக்கு ஆண்மையையும் , பெண்களுக்கு பெண்மைத் தன்மையையும் தருவது இதுவே.
மேலும் உறங்கி எழும் வரை நம்மை காப்பதும் அந்த இறை சக்தியே என்று
உணர்ந்தாலும் - கடவுள் உண்டு என தெளியலாம்.
கடவுளைக் காண - கட+ உள்.
உள்ளே கடக்காமல் யாருக்கும் அவர் தெரியார், பெரியாருக்கும் கூட.