வாசிப்பின் அவசியம்

அறிவு தேடல் - வாசிப்பின் அவசியம்

 

"ஆயிரம் மொழிகள் கற்றுகொள் தாய்மொழி பேசபேருமை கொள்" என்றான் பாரதி. ஆயிரம்மொழிகள் கற்றுக்கொண்டால் ஆயிரம்மனிதர்களுக்கு சமம். தனது தாய்மொழியைமட்டும் வாசிப்பவனால் உத்தேசமாக குறைந்தது500 சிறந்த புத்தகத்தை படிக்க முடியும். அதுவேஅவன் மற்ற சில மொழிகள் தெரிந்திருக்கும்பொருட்டு அவனால் இன்னும் பல சிறந்தபுத்தகத்தை படிகக வாந்ப்புகள் வரும். அவனதுதாய் மொழி குறுகிய வட்டாரத்துக்குள் மட்டும்இருந்தால் 100 சிறந்த புத்தகத்தை அவனால்படிக்க இயலாது.

 

 

பல புத்தகம் படித்தவன் ஓர் புத்தகம் எழுதுகிறான்,இவனது நூலை படிப்பவன் இன்னொறு நூலைபடைக்கிறான். இவ்வாறு அவர்களுடையதாய்மொழி வளர்கிறது.

 

  மொழிகளில் ஆங்கில மொழி முக்கியமானதாககருதப்படுகிறது. அதற்கு காரணம்ஆங்கிலேயரின் காலனியாதிக்க முறை. இதன்மூலம் அவைகள் மொழியையும்,மதத்தையும்பரப்பினர்.

 

ஒருவர் தனக்கு பிடித்த எந்த துறையாவதுமுதலில் தேர்ந்தெடுத்து படிக்கலாம். அவர்படிக்கும் துறையில் கூறப்பட்டுள்ள மற்றொருதுறையை அவர் படிக்கக்கூடும். இவ்வாறுவிளையாட்டாக படிக்க ஆரம்பிக்கும் ஒருவர்புத்தக வெறியராக மாறி ஓர்விங்ஞானியாகவோ,பேச்சாளராகவோ,எழுத்தாளராகவோ ஆகமுடியும் என்பது தான்உண்மை. அப்படித்தான் பலர் உலகம் போற்றும்முக்கியஸ்தர்களாக மாறியுள்ளனர்.

 

  ஓர் புத்தகம் படிக்கும் பொழுது அதில்குறிப்பிட்டுள்ள அனைத்து துறைகளிலும் தெளிவுவேண்டும். உதாரணமாக "How to Become Indian"என்ற புத்தகத்தில் உலகமயக்கொள்கை பற்றிகூறியிருந்ந்தால் உலகமயம் பற்றியும் தெரிந்துதெளிவு கொள்ள வேண்டும். ஒருவர் சே குவாராபற்றி படிக்கும் பொழுது பிடல் காஸ்ரோ பற்றிபடித்தால் கியூபப்புரட்சி முழுவதும்அறிந்துகொள்ளாம்.அண்ணா திமுகவை ஏன்உருவாக்கினார்? கழகம் எவ்வாறு வளர்ந்தது?என்பதை அறிந்துகொள்ள வேண்டுமானால்பெரியார்,காமரசர்,கருணாநிதி போன்றவர்களைபற்றி படிக்க வேண்டும்.பிராமணியம் பற்றி அரியவிரும்புபவன் வேதகாலம் முதல் இதிகாசம் வரைஅனைத்தையும் படிக்க வேண்டும்

 

  இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைபடுத்தக்காரணம் நம்மவைகள் பலரிடம்கல்வியறிவு இல்லை,விழிப்புணர்வு,பகுத்தறிவுஇல்லை.முக்கியமாக சாதி,மத பாகுபாடினால்அனைவருக்கும் கல்வி என்பது இல்லாமல்போனது. ஆனால் மற்ற முற்போக்கான உலகநாடுகளில் அனைவருக்கும் கல்வி என்பதுஅவசிமானதாக இருந்தது. "கற்றோருக்கு சென்றஇடமெல்லாம் சிறப்பு","கற் கற்பி" என்பதைமேல்சாதியினர் மட்டுமே பயின்றனர்.

 

  ஒருவன் வாசிக்க ஆரம்பித்தால் அவனதுஎண்ணம் விசாலம் அடைகிறது.அவனது குறுகியபார்வை உலகம் முழுவதும்விரிகிறது.உலகிலுள்ள சாதனையாளர்களில்வாசிப்பு திறன் அற்றவர்கள் என்று எவராலும்சுட்டிக்காட்ட முடியாது. அவர்களுள் சிலரைஉதாரணமாக பார்ப்போம்.

 

1) சே குவேரா - தனது பள்ளி காலம் முதல்அனைத்து துறை புத்தகத்தையும் படித்தார்.இதன்மூலமே அவருக்கு லத்தின் அடிமைபட்டு கிடப்பதுபுரிந்தது.அதற்காக போராடவும்செய்தார்.போராட்டதின் போதும் படிக்கும்பழக்கத்தை அவர் விடவில்லை. ஓர் மடுத்துவர்கியுபாவின் பொருளாதார மேதையாக இருந்தார்என்றால் அது சே குவேரா தான்.

 

 

2) ஹிட்லர் கம்யுனிசம் மீது ஈடுபாடு கொண்டுகம்யுனிசம் சித்தாந்தத்தை படிக்கலானார். பின்புமுதல் உலக போரின் இறுதியில் அவர் ஆற்றியஇராணுவ சேவை மூலம் அவர் இராணுவதின்ஆணைபடி புதிய கட்சி ஆரம்பித்தார் அதுவேநாஜி கட்சி. வெறும் ஆறே பேரால்உருவாக்கப்பட்டது. ஹிட்லரின் நாஜி கட்சியில்கம்யுனிசம் சாயல் சிறிது இருக்கும். பள்ளிபடிக்காமல் தேசப்பற்றை புத்தகம் மூலமாக படித்தஅவர் உலகத்தையே ஆட்டிபடைத்தார்.

 

 

3) அண்ணா அவர்களின் அறிவாற்றல்அனைவரையும் புரமிப்புட்டியது. கன்னிமாராநூலகத்தில் பாதி சதவிகித புத்தகத்தை படித்தார்என்றும் கூறுவர். இதுவே அவரைபொதுசேவையில் ஈடுபட செய்தது. தமிழகத்தின்பேராதறவு கொண்ட முதல்வர் ஆக்கியது. காந்திமுதல் அரவிந்து கெஜ்ரிவால் வரை அனைவரும்புத்தக வெறியர்கள்.இன்னும் பல உதாரணங்கள்கருணாநிதி திராவிட புத்தக வெறியர், பிராபகரன்Client Eastwood புத்தகவெறியர்.

 

 

இன்று வாசிப்பு திறன் குறைந்துவிட்டது என்றுகூறாலாம். இதற்க்கு காரணம் தொலை என்றுதொடங்கும் அனைத்து சாதனங்களும் வாசிப்புதிறனுக்கு தொல்லையாக அமைகிறது.மக்கள்அனைவரும் சொகுசாக வாழவிரும்புகிறாகள். 

 

 

வாசிப்பின் மூலம் சுயநலம் கடந்து பொதுநலம்உண்டாகும், அறிவு விரித்தடையும்,மொழி,நாடுவளரும்.

எழுதியவர் : சங்கர் நாராயணன் (27-Nov-17, 8:07 am)
சேர்த்தது : shakespeare
பார்வை : 3853

மேலே