மனம் குளிர நீ வேண்டும்
இருளில் தோன்றும் மின்மினி போல் உன் நினைவுகள்
தரு நிழலின்றித் தவிக்கின்ற மானாக
கொடும் வெயிலில் அகப்பட்டுக் கொதிக்கின்றேன் நான்
குளிர் நீரில் கிடக்கும் தாமரையாக எழுந்து நீ வந்து
என் தளிருடல் போர்த்தக் கூடாதா?
உன் தரிசனம் இல்லாது நீர் காய்ந்து
மூச்சையாகிக் கிடக்கும் மீனானது என்னுயிர்
உன் விரல் தொடு பார்வையால் அதற்கு உயிர்ப்பு விசை கொடு
உன் விளிக் குளத்தில் ஓடோடிச் சென்று அது நீந்திக் கழிக்கட்டுமே!
ஆக்கம்
அஷ்ரப் அலி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
