விரைந்து வந்து விடு
உனக்காக காத்திருக்கும்
பொழுதுகளில்
என் கடிகாரம்
இன்னும் மெதுவாகிறது
அசைய மறக்கிறது
என் கால்கள்
இன்னும் கடுக்க்கிறது
இருந்தும் நிற்கிறது
என் கண்கள்
தூரமாய் பார்க்கிறது
உன்னையே கேட்கிறது
என் தேகம்
பாரமாய் இருக்கிறது
இருந்தும் சிலிர்க்கிறது
என் பாதம்
நிற்காமல் தாளமிடுகிறது
எதையோ வரைகின்றது
என் கைகள்
தனக்குள் பிசைகின்றது
சொடக்கு இட்டுக்கொள்கிறது
என் கூந்தல்
ஓய்ந்து போகின்றது
சாய்ந்துகொள்ள தேடுகின்றது
என் நெஞ்சம்
துடிப்பு வேகமாகிறது
மேலேகீழே போகிறது
என் காதல்
இன்னும்அதிகமாகிறது
இன்னும் அழகாகிறது
என் மூச்சு
இன்னும் ஆழமாகிறது
இன்னும் வேகமாகிறது
என் ஆன்மா
எதையோ தேடுகிறது
அதற்குள்ளே தன்னை
நுழைத்திட தேடுகிறது
என் உயிர்
உன்னையே தேடுகிறது
உனக்குள்ளே தன்னை
கலந்திட தேடுகிறது
என் உணர்வெல்லாம்
உன்னையே தேடுகிறது
உனக்குள்ளே அது
உறைந்திட நினைக்கிறது
உனக்காக காத்திருக்கும்
இந்த பொழுதுகளில்
எனக்குள்
என்னன்னவோ நிகழ்கிறது
இருந்தும்
அழகாகவே இருக்கிறது
விரைந்து வந்து விடு
கசிந்து உருகும் இந்த
காத்திருப்பில் நான்
கரைந்து போவதற்குள்