காய்ச்சலிலும் கவிதை எழுதுவேன்

நாடி தளரும் வேளையில் உன்னை நாடி வருபவர் யாரோ?
நாடி தளரும் வேளையில் உன்னை தேடி வருபவர் யாரோ?

கீழே விழுந்தால் தாங்கும் பூமியே எனக்கு சொந்தம்.
தவழும் காற்றோடு கலந்து நாளும் நான் வாழும் வாழ்க்கை,
தண்ணீரில் மூழ்குமோ? கண்ணீரில் மூழ்குமோ?

படுக்கை அறையை விட்டு வேளியே வாருங்கள்..
அதை விட அவனும் அவளும் காண கணக்கிலா அனுபவம் இருக்கும் காணும் பூதவுலகிலும், காணாத கனவுலகிலும்...

உனக்கான எல்லைகளை எப்போதும் மறவாமல் இருந்தாலே போதும்.
சோர்க்கம் உன் கையிலே...

ஏகாந்தமே சொந்தமென்றால் என்னதென்று தெரியாதவரை நான் சொல்லும் வார்த்தைகளின் அர்த்தம் உனக்குப் புரியாது..

வேசம் போடும் உறவுகளைவிட வெறுக்கும் உறவுகளுக்கு ஒராயிரம் நன்றி சொல்லிவிட்டு,
மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று ஔவையின் வாக்கில் நிலையாய் வாழ்ந்து அன்பின் வழி அனைவரையும் வாழ்த்திவிடும் கானகம் தேடி கானம் பாடும் வானம்பாடியாய் நாளும் உங்களுக்காகப் பாடிக்கொண்டே இருப்பேன்...

என் சோகங்கள் மேகங்களாய் என் நெஞ்சை உருக்கினாலும்
அன்பென்ற மழையாய் உலகில் பெய்வேன்...
கனவல்ல...
நனவு...

உடல் நடுங்கும் வேளையிலும் சிந்தை நடுங்காது, தடுமாறாது,
அதன் கடமை ஆற்றுகிறது எக்காலத்தும்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Nov-17, 6:37 pm)
பார்வை : 1783

மேலே