கார்த்திகை தீபம்

முன்னிரவு காரிருள் வானம்
ஒளியேற்ற எண்ணிறந்த
வானத்து அகல் விளக்காய்
சிமிட்டிடும் தாரகைகள்
ஆங்கு வந்து அண்ணாமலை
தீபமாய் பேரொளி தந்தது
இயற்கை அன்னை ஏற்றிவைத்த
கார்த்திகை பெரும்ஜோதி.-
பௌர்ணமி நிலவு..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Dec-17, 9:46 am)
Tanglish : kaarthikai theebam
பார்வை : 121

மேலே