அன்னை நம் ஆலயம்
தாயே!....
எம்மை தவமாய் தவமிருந்து
என்றாய் நீயே!.....
உன்னுடல் புண்பட்டாலும் -பூவாய்
எம்மை காத்தாய்!...
புல்லாய் நான் சிரிக்க -புவியாய்
என்னை தங்கினாய்!....
தேனை போல அமிழ்த்தம் ஊட்டி
தென்றலாய் என்னை வளர்த்தாய்!....
தேக்குப் போன்று நான் வளர
தேய்ந்து தேய்ந்து கிடந்தாய்!....
தமிழ் சுவை எனக்கு ஊட்டி
தாலாட்டு தினம் பாடி
தரமாய் என்னை வளர்த்தாய்!....
எம்மை மணிமேகலையாய் மார்பிலிட்டு
சிந்தமையாய் சீராட்டி
சிலபதிகரமாய் சிரிக்க வைத்தாய்!....
எம்சிறு சிறு குறும்புகளை
குயில் பாட்டாய் ரசித்தாய்!....
என் கால் முல் சுமந்தாள்
எனக்காக குருதி சிந்தினாய்!.....
உன் மடியோ சொர்கம்
அது இல்லாயின் வாழ்வோ நரகம்!.....
பயிராக நான் சிரிக்க
பகலாக நீ நடந்தாய்!.....
என் முகம் கண்டு -உன்
பசி நீ மறந்தாய்!.....
என் மனம் இன்புற -உன்
மனம் குளிர்த்தாய்!...
இன்பங்கள் மறந்து
கொடுமைகள் சுமந்து
எம்மை காத்தாய்!.....
கல்லாய் சிதைந்து -சிலையாய்
எம்மை செதுக்கினாய்!....
உன் பாதமோ மொட்டு
அதை நான் தொட்டு
வணங்குவேன் கண்ணீர் விட்டு
என்றென்றும்!......