அம்மா

உயிரும் மனமும் சிரித்து
உடலை இன்றும் கிழித்து
அழகாய் சிறகடித்து
இன்பமாய் பெற்றெடுத்து
கண்ணிரை அருவியாக்கி
பன்னீரை எனக்கு ஊட்டி
கருவில் என்னை சுமந்து
கல்வியானவனாய் வளர்த்தெடுத்து
இமையாய் சிறகடிக்கும்
அன்னை தெய்வமே!.....
அறிவை ஊட்டி
அன்பை காட்டி
ஆற்றலாய் வளர்க்கும்
இல்ல தெய்வமே!....
இன்பம் என்றும் மறந்து
எனக்காக இன்றும் வாழ்ந்து
கடல் அளவு துன்பம் பட்டு
முத்தாய் பாதுகாத்து
உள்ளம் உலகையால
வாழும் உண்மை தெய்வமே!....
பிறப்பிலும் வளர்ப்பிலும் -தேய்
பிறையாய் தேய்ந்து
உலகிற்கு வெளிச்சம் காட்டும்
நிலவின் பிம்பமே!....
நிலவை நிழலாக்கி
அதில் என்னை உருவாக்கி -வாழும்
அன்பின் அருவியான
கரு விழியே!....
கடல் கடந்தாலும்
உன்னை மறவேன்!.....

எழுதியவர் : பெரியகவுண்டர் (4-Dec-17, 5:17 pm)
Tanglish : amma
பார்வை : 690

மேலே