அமிழ்ந்தபடி

உன் அன்பெனும்
நீருக்குள்ளே
கால தேவனின்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
என்னை அறியாமலே
தடுக்கி விழுந்து

பின் அதிலே
என்னை மறந்து
மூழ்கிப்போன நான்
நீச்சல் மறந்த
நீச்சல்காரனாய்
இன்னும் இன்னும்
ஆழமாய் உனக்குள்
அமிழ்ந்தபடி!!

எழுதியவர் : யாழினி வளன் (4-Dec-17, 11:19 pm)
பார்வை : 80

மேலே