நாமான பின்பு

நான் விரும்பி அணியும் ஆடை
என் அண்ணனின் சட்டை...

நான் முதன்முதலாய் கட்டிய புடவை
என் தாயின் சேலை...

நான் என் உடைகளுக்குள் (உடைகள் கடந்து(தாண்டி))
உன்னை எப்பொழுதும் சுமக்க விரும்புகிறேன் நெஞ்சோடு
(உன்னை)என் மானமாக...
என் தாலியாக...
என் உயிராக...
(உன்னை) என் சுவாசக் காற்றாக...
(உன் அன்பை)என் மூச்சாக...
(உன் உடலை)என்னுடையாக...
நீ மட்டுமே என் உலகமாக...
உன்னை என்னில் இருந்து
சிறுநொடிப் பொழுதும்
பிரிக்க இயலாது.
பிரிக்கவும் விடமாட்டேன்.
பிரிக்கும் பொழுது
என் உயிர் உன் மார்பில் நின்றிருக்கும்.
என் உடல்
உன் மடியில் சரிந்திருக்கும்...
என் உயிர் உன்னில் பிரிந்திருக்கும் (கரைந்திருக்கும்)...
அது உன்னையே(உன்னோடே) சேர்ந்திருக்கும்...
அது உன் சுவாசக் காற்றாய் உன்னையே சுழன்றிருக்கும்...(சுழன்று கொண்டிருக்கும்)...

நீ வேறு
நான் வேறு இல்லை
நாமான பின்பு..

~ உன் மனைவி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Dec-17, 1:39 am)
பார்வை : 121

மேலே