தொலைந்த செல்லும் தொலையாத நினைவும் - சி எம் ஜேசு
உலகில் ஓடி
இசையில் ஆடி
வெளியில் வந்தேன்
வெளிச்சம் சுருங்கி
மின் வெளிச்சம் மேலிட
கைபேசியுடன் நின்றேன்
அருகில் யாரும் இல்லை அங்கே
அமைதி மட்டும் ஆட்க்கொண்டது என்னை
எதுவும் நடவா
இடமாய் தேடி ஒரு வேலையாய் நான்
என் நாவும் செவியும்
முழக்கமாகி மூழ்கிய அந்நேரம்
வாயோடு பதிந்த வன்னமாய் - என்
தொலைபேசி என் கைப்பிடியில் - பின்
வந்தவர் நிலை காண நான்
மரமாகி கை பேச்சில் பதிந்தேன்
முழுதாய் பேச முயல்வதற்குள்
முழுதாய் மேலே இழுக்கப்பட்டது கைபேசி
என்னவென்று அறியாமல்
உடலும் உள்ளமும் குலுங்கி என்முன் கண்டேன்
ஒருவர் ஒல்லியாய் பைக்கில்
மற்றொருவர் குண்டான தோற்றத்தில்
என் கைபேசியுடன்
சட்டேன விரைந்து பிடித்திட முயல முடியாத
பின்னொருவரும் குரல் எழுப்பி என் அருகே வந்திட
அவர் தொலைபேசியும் எடுக்கப்பட்டு உள்ளது
அவர்களின் கையில் என அதிர்ந்தோம்
கூக் குரலும் எழுப்பினோம்
அருகில் சென்றவறேல்லாம்
விரைந்து சென்றனர் அங்கே
ஒருவரும் எங்களின் நிலை அறியாமலே
இ சி ஆறிலே ஈஸியா இருக்குமென
பேசிய எங்களின் கைப்பேசிகளை
ரொம்பவே ஈஸியா இரு வாலிபர்கள் பறித்தனர்
இருவரும் உடன் செல்ல
இயக்கமாக தயக்கம் காட்டியது சில மணித் துளிகள்
இருந்தாலும் விரட்டி வேகமானோம்
எங்கே தேடியும் அவர்களின் பைக்கை காணோம்
தடதட வென படபடத்த உணர்வுகளோடு
அருகிருக்கும் காவல் நிலையத்திலே ஐக்கியம் ஆனோம்
உடனே கேட்டறிந்து உணர்வுடன் ஆறுதல் சொல்லி
எப்பை ஆரை அளித்தனர் கையிலே
கொஞ்சம் நிம்மதியாகி கிடைக்கும் எனும்
எதிர் பார்ப்புகளுடன் தயக்கமாகவே
இயக்கமானோம் அவரவர் இல்லங்களுக்கு
என்ன செய்வதென்று அறியா உணர்வுகளுடன்
இன்றுவரை என் இயக்கம் கொஞ்சம் தயக்கமாகியே
இசை நடை போடுது
போன்தான் போச்சே என் சிம்மை
வாங்கலாம் என்றெண்ணி நிலையம் போக
அலையும் கூட்டமெல்லாம் அங்கே இதே
நிலைக்கு தான் என கேட்டேன் அதிர்ந்தேன்
ஆயினும் எனக்கு ஒரு சிம் கிடைத்திட
அமைதியாகி அடுத்த வேலைகளுக்கு ஆயுத்தமாகினேன்
குறிப்பு ; ( என் புதிய செல்போன் ஒன்று ஒரு பைக்கில்வந்த
இரு ஆசாமிகளால் பறிக்கப்பட்டுவிட்டது 23.11.2017 அன்று அவ்வளவு தான் )
ஜேசு பிரகாஷ் சி .எம் .
இசை ஆசிரியர் இசைகலைமணி இசையமைப்பாளர் எழுத்தாளர்