ஆதார் எது

சூல் அறியாது
ஈன்றுவிட்ட
குப்பைத்தொட்டி
குறித்து
வைக்கவில்லை
என் பிறப்பை
அரசாங்க
கணக்கிலும்
கணக்கில்
வரவில்லை
நான்!
இன்று,
ஆதார அட்டை
கேட்கிறது என்
பிறந்தநாளை
தயவு செய்து
சொல்லுங்க
எனக்கு
ஆதாரம் எது?
நா.சே