பார்த்த உடன் காதல்

அன்று ஒரு நாள் நானும் என் தோழியும் வெளியே சென்றோம். அங்கு ஒரு கடை இருந்தது அதன் கதவில் மெகா எக்சேஞ் ஆஃபர் என்று ஒரு வசனம். அதை பார்த்த உடன் எனக்கும் ஆசை வந்தது. நாங்கள் இருவரும் கடைக்குள் சென்றோம். என் கையில் இருந்த கைபேசியை கடையின் மேல் அதிகாரியிடம் காண்பித்து எவ்வளவு ஆஃபர் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு தொகை சொன்னார் சரி என்று சொல்லி உள்ளே சென்றேன். நானும் என் தோழியும் நாற்காலியில் அமர்ந்தோம் என் முன் ஒரு நபர். அன்று எனக்கு தெரியாது நாங்கள் காதலிப்போம் என்று. நான் அவனை பார்த்தேன் அவனும் என்னை பார்த்தேன் வேறு எதுவும் நாங்கள் பேசவில்லை. நான் அங்கு இருந்து ஒரு புதிய கைப்பேசி வாங்கி கொண்டு வந்துவிட்டேன். மறுநாள் இரவு எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது நான் யார் என்று கேட்டேன். அந்த நபர் அவர் பெயரை கூறமறுத்துவிட்டார். மறுநாள் அறிமுகம் ஆனோம் இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்தோம. எங்கள் நட்பு காதலாக மாறியது நீயின்றி நான் இல்லை நான் இன்றி நீயில்லை என்ற நிலைமை உருவானது. காதல் என்ற எங்கள் வாழ்க்கை திருமணம் என்ற வாழ்க்கை வரை ஏனோ செல்லவில்லை. என் காதலனிடம் இருந்து ஒரு குறுந்தகவல் மட்டும் வந்தது நீ எனக்கு வேண்டாம் என்று. ஆனால் என் மனம் சொன்னது நீ எனக்கு வேண்டும் என்று என்றோ ஒரு நாள் அவன் மனம் என்னை ஏற்றுக் கொள்ளும் என்ற ஆசையில் நானும் என் மனமும் வாழ்கிறது. எப்பொழுதும் வாழும்.

எழுதியவர் : விஷாலி (6-Dec-17, 9:23 pm)
Tanglish : partha udan kaadhal
பார்வை : 222

மேலே