தாத்தா பாட்டி தின வரிகள்
![](https://eluthu.com/images/loading.gif)
பாசத்தினை பரணியில் பதுக்கிவைத்த பாட்டன்
நேசத்தினை நெஞ்சகத்தே நெகிழச்செய்யும் பாட்டி...
நாடளக்கும்தூரம் அனுதினமும் பாட்டிநடக்கும் சமையலறை
பாடம்கற்கும் பாதவெடிப்புகள் பாட்டன்சுமக்கும் காலம்வரை...
வென்றவாழ்க்கை விடைகானவில்லை சென்றவிடமெல்லாம் செழித்தோங்கவில்லை
ஈன்றசெல்வங்களுக்கு வழிகாட்டிவாழும் தோன்றாக்கடவுள்தான் பாட்டன்பாட்டி...
பழையகதைகள் பாட்டிசொல்வார் அழகியதமிழில் பாடிச்சொல்வார்
விளையாச்சிறுவன் அயறும்முன்னே இரையூட்டி மகிழச்செய்வார்...
பயணக்கதைகள் பாட்டன்சொல்வார் விளக்கம்கேட்டால் விடுகதையென்பார்
துயரம்நிறைந்த தூரம்கூட தோளில்கிடத்தி சுமந்துசெல்வார்...
முதுமைசுமக்கும் பாட்டன்பாட்டி வறுமைகண்டால் அஞ்சுவதில்லை
புதுமைமறக்கும் இயற்கைமருத்துவம் இவர்களிடத்தே செழித்துநிற்கும்...
புன்சிரிப்பை உட்கொண்டே உயிர்த்திருக்கும் இவர்களுக்கெல்லாம்
இன்மொழியில் இலக்கணம்எழுதி பணிந்துநிற்போம் பாதச்சுவடுகளில்...