இயற்கை அழுகிறது
காடுகளின் பரப்பளவு
குறைந்துவிட்டன
மணலை பறிகொடுத்து
மாங்கல்யம் இல்லாத
மங்கையாக ஆறுகள்...
பூமாதேவியின் உடலை
துளைத்து துளைத்து
குருதி உறிஞ்சும்
அட்டைகளாக ஆழ்துளை
கிணறுகள்...
குன்றுகள் எல்லாம்
கல் குவாரிகளாக
கழனிகளெல்லாம்
கான்கிரீட் நிலங்களாக
நாளைய சந்ததிக்கு
வாழ்வாதாரமே கேள்விகுறி...
வெளிநாட்டு குளிர்பானம்
நம் நிலத்தடிநீர் தானம்
ஓட்டை விழுந்த வளி
நெஞ்சுக்குள் ஆயிரம் வலி...
நெல் விளைந்த பூமியில்
கல் கட்டிடங்கள்
தோட்டங்கள் எல்லாம்
தொழிற்சாலைகள்...
காலம் மாறிப்போச்சு
நவீன யுகம்
கணிப்பொறி ஆதிக்கம்
கணிப்பொறி உதிரிகள்
உணவாகுமா....
நெகிழியின் ஆதிக்கம்
ரசாயன கழிவுகள்
சாலையெங்கும்
புழுதியும் கார்பன் கலந்த
கற்றால் சுவாச கோளாறுகள்...
இன்றே மாற்றம் தேவை
நேற்று நம் முன்னோர்கள்
ஒப்படைத்த இந்த பூமியை
நாளை நம் சந்ததி அப்படியே திருப்பி கேட்டால்
என்ன சொல்லபோகிறோம்...