பாரதி
ஒரு தீ
பாரதியாய்
தோன்றிய தினம்
ஒரு பூணூல்
துணிந்து
ஜாதியியலை
எரித்த சரித்திர தீ
முளைத்த தினம்
பல மொழிகள்
புலமை பெற்றும்
தமிழை சுவாசித்தவன்
முதல் சுவாசத்தை
சுவாசித்த தினம்
செல்லம்மாளின்
கணவனெனும்
வரத்தோடு வந்த தினம்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
என்று கர்ஜித்தவன்
மண்ணில் விதையாய்
விழுந்த தினம்
சிவகாமியின் கருவை விட்டு
சிசுவென வெளியேறிய தினம்
சுதந்திர கவிதை படைக்க
சுப்பையாவாக பிறந்த தினம்
நாடி நரம்பு என
முழுவதும்
தமிழை கொண்டவன்
தன் தொப்புள் கொடி
அறுத்த தினம்
கவிதை படைப்பதை
தொழில் என்றவன்
தமிழ் மண்ணில்
தோண்டிய தினம்
கவிதை கடலென
நீ வாழ்ந்த
பூமியில்
சிறு துளியென
நானும்
உன்னையும்
உன் கவிதையையும்
பாடமென பயின்று
உன் பிறந்த நாளில்
காலம் முடிந்து
மரணம் வந்தவுடன்
மீண்டும் வருவேன்
உன்னிடம் பாடம் படிக்க
அதுவரை ஆசி வழங்கு
என் ஆசானே
உன் பாதையின்
கால்தடம் பிடித்தபடி
நா.சத்யா