மறுத்தது ஏனோ
தனிமை எனக்கு இன்று
வரமாகி போனதே
காலம் செய்த சதியா இல்லை
இது தான் தலை விதியா!!
நினைக்க மறந்தும் உன்னை
என்றும் மறக்க நினைக்கவில்லை
கண்ட நாள் முதல் என் இமை
உறக்கம் கொள்ளவில்லை
மறைக்காத என் காதலை
மறுத்தது வெறுத்தது ஏனோ?
அநாதை உனக்கு காதல் எதற்கு
என்றெண்ணி தானோ?
தனிப் பறவை என் வாழ்வில்
நீ வந்தால் ஒளி வரும் என்றென்னி
தொலைகிறேன் தினம்
கடைக்கண் பாராயோ தீயே