உண்மையான காதல் பிரிவதில்லை - தொடர்ச்சி7

" எனக்கு ஒரு சந்தேகம் பெரியவரே! ",என்றான் ஜெகன்.

" கேள் ஜெகன். ",என்றார் வயதான குரங்கனார்.

" உங்களால் பேச முடியுமா? அப்படியெனில் முன்பு ஏன் பேசவில்லை? ",
என்றான் ஜெகன்.

" பேச அவசியமற்ற இடங்களில் பேசுவதும், பேச அவசியமான இடங்களில் பேசாதிருப்பதும் முட்டாள்தனம். இப்போது பேச வேண்டிய அவசியமுள்ளது. பேசுகிறேன். ", என்றார் பெரியவர்.

" ஆனால், நீங்கள் எப்படி இவ்வளவு அழகாகத் தமிழ் பேசுகிறீர்கள்? ",என்று குறுக்கிட்டாள் ஜெனி.

புன்னகைத்த குரங்கனார், " கல் தோன்றி மண் தோன்றாத காலத்து முன் தோன்றிய மூத்தக் குடி தமிழர்கள் என்கிறீர்கள். தமிழே தோன்றாமல் தமிழர்கள் எப்படி தோன்றினார்கள்?
ஆதலால், நான் தமிழ் பேசுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ",என்றார்.

ஜெனி கண்கள் விரிய ஆச்சரியப்பட்டாள்.

" இந்துக்களில் ஐயர் வந்து சமஸ்கிருத பாஷையில் வேத மந்திரம் ஓத கல்யாணம் செய்வார்களே. ",என்று குரங்கனாரை வாதத்திற்கு இழுத்தார் காயத்ரி அம்மா.

மீண்டும் புன்னகைத்த குரங்கனார், " உங்களுக்கு சமஸ்கிருத பாஷை தெரியுமா? ", என்றார்.

"தெரியாது.",என்று விழித்தார் காயத்ரி அம்மா.

" தெரியாத பாஷையில் மந்திரங்களை உச்சரிப்பதை மனதால் எப்படி கிரகிக்க இயலும்? மந்திரங்கள் என்பவை மனதை செம்மைப்படுத்துவதற்காக உபயோகப்படுபவை.
செம்மையான மனங்களுக்கு மந்திரம் தேவையில்லை.
எதையும் புரிதலோடு உச்சரிக்கும் போதே அது சித்திக்கிறதென்பது சித்தர் வாக்கு.
ஆக வேத மந்திரங்களை பகுத்துப் பார்த்தீர்களென்றால் மணமக்களிடம் நான் கேட்ட கேள்வியும், செய்ய சொன்ன சத்தியமும் வேத மந்திரங்களின் தமிழாக்கம் என்பதை புரிந்து கொள்வீர்கள். ", என்று தெளிவுபடுத்தினார் குரங்கனார்.

" அது சரிதான். ஆனால் இந்துகளில் தாலி கட்டிக்கொள்வதும், கிறிஸ்டின்ஸ்ல மோதிரம் மாற்றிக் கொள்வதும் வழக்கம்.
இங்கே அப்படி ஏதும் நிகழவில்லையே. காரணமென்ன? ", என்றார் கனகராஜ்.

" பாராட்டப்பட வேண்டிய கேள்வி. அதற்குக் காரணம் தாலிக் கயிறென்றால் அறுத்து போகும். தங்கமென்றாலும் நிலைக்க வாய்ப்பில்லை. மோதிரங்களும் கழண்டு விழுந்துவிடலாம் என்பது தான் ", என்றவர், மேலும், " உடலியல் பொருட்கள் நிலைப்பதில்லை. நிரந்தரமில்லை. கணவன் மேல் கோபம் வந்தால் தாலியைக் கழட்டி எறிகிறாள் இந்து பெண். அங்கேயே மூன்று முடிச்சுகளின் அர்த்தங்களும் அழிந்து விடுகிறது. அதுபோல மோதிரங்களைக் கழட்டிவிட்டு பந்தத்தை முடிக்கிறார்கள்.
இப்படி தீர ஆராய்ந்து பார்க்கையில் மனம் என்பது மனிதனால் கழட்டி வைக்க முடியாத ஒன்று. மனதை மறைத்து ஏமாற்றினால் மனமே தண்டிக்கிறது.
ஆதலால், இந்த திருமணம் மனச்சாட்சிப்படி நடத்தப்பட்டது. ", என்று மணமக்களை நோக்கிச் சொன்னார் குரங்கனார்.

அவரின் வார்த்தைகள் உண்மையானவை என்பதால் எல்லாரும் அமைதியாக இருந்தனர்.

சிங்கமும், புலியும் எழுந்து வந்து மணமக்கள் முன்னால் நின்றன.

" மணமக்களே! நாட்டை நிர்வாகிக்க ஒரு ஆள்மைமிகு அரசனும், அறிவுமிகு அமைச்சரும் தேவை.
அரசனும், அமைச்சரும் ஒன்றுபட வேண்டும்.
அரசன் தலைக்கணத்தால் அமைச்சரின் அறிவுரைகளைக் கேளாமல் செயல்பட்டால் நாட்டுக்குக் கேடு. அதே போல் அமைச்சர் அரசனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தால் அப்போதும் நாட்டுக்கே கேடு. அதை ஒத்ததே ஒரு குடும்ப நிர்வாகமும். அதில் யார் அரசன்? யார் அமைச்சர்? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
அரசன் சிங்கத்தின் மீதும், அமைச்சர் புலியின் மீதும் அமர வேண்டும். ", என்று பெரியவர் குரங்கனார் வழிகாட்டினார்.

ஜெகன் ஜெனியை நோக்கிப் புன்னகைத்தான்.
ஜெனி ஜெகனை நோக்கிப் புன்னகைத்தாள்.

அடுத்த சில நொடிகளில் ஜெனி புலியின் மீது அமர, ஜெகன் சிங்கத்தின் மீது அமர்ந்தான்.

" நல்ல தேர்வு. ", என்று பாராட்டிய பெரியவர், மேலும்,
" தமிழர் பண்பாட்டைப் பற்றி ஒரு விடயத்தை மணமக்களாகிய உங்களுக்கு நினைவுகூர விரும்புகிறேன். ", என்றார்..

ஜெனியும், ஜெகனும் பெரியவர் சொல்வதைக் கேட்கத் தயாராக
மற்றவர்களும் தங்கள் காதுகளைக் கூர்மையாக்கினார்கள்.

" ஜோடிப்புறாகளின் காதலை ஒத்தது தமிழ் பண்பாட்டுக் காதல்.
ஜோடிப்புறாகளில் இருவரும் பிரிவதே இல்லை. அந்த இருவரில் யாரெனும் ஒருவர் இறந்துவிட்டால், மற்றோருவர் இறந்தவரையே எண்ணி தன் உயிரை மாய்த்துக்கொள்வார்.
அதுபோலவே தமிழ் பண்பாட்டில் காதல் திருமணத் தம்பதியர்களாய் வாழ்ந்தார்கள்.
அப்படி வாழும் போது, கணவன் இறந்துவிட்டால், மனைவியும் உடன்கட்டையில் ஏறி உயிர்துறப்பாள் தானாக முன் வந்து. அதேபோல் மனைவி இறந்தால் கணவன் உடன்கட்டையில் ஏறி உயிர்துறப்பான் தானாக முன் வந்து.
இந்நிலை காலப்போக்கில் மாறியது. மனைவியை இழந்த
ஆண் மறுமணம் செய்து கொண்டான். கணவனை இழந்த பெண் மட்டும் வஞ்சிக்கப்பட்டாள். அவளுக்கு விருப்பமில்லாவிடிலும் உடன்கட்டையில் ஏற்றப்பட்டாள்.
பிறகு தோன்றிய புரட்சியில் பெண்களும் மருமணம் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்.
இதை நான் உங்களுக்குச் சொல்லக்காரணம், காதலின் மதிப்பு மலிவாகிக் கொண்டே போகிறது. நீங்கள் எப்படிப்பட்ட காதலர்கள் என்பதை உங்கள் வாழ்க்கை முறை சொல்லும்.
உங்களின் வாழ்க்கை முறையே உங்களுடைய வேதம். ", என்று நீண்ட உரையாற்றி முடித்தது..

இப்படியே பேசிக் கொண்டிருந்ததில் அனைவருக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது.
ஆதலால் பந்தியில் அமர குரங்குகள் பரிமாறின பழங்களை.

புசித்துப் பசியாறிய பின் புதுமண தம்பதியரையும், அவர்கள் பெற்றோரையும் வழியனுப்பி வைத்தனர்..

கனகராஜ் ஜெகனிடம், புதியதாக சகல வசதிகளோடு தன் மகளுக்காகக் கட்டிய புது வீட்டின் சாவியைக் கொடுக்க, ஜெகன் ஜெனியைப் பார்த்தான்.
ஜெனி வாங்கிச் சொன்னாள்.
ஜெகன் வாங்கிக் கொண்டான்.

காயத்ரி அம்மாவிற்கு ஒரே வருத்தமாயிற்று.
அவர்களின் மனதில், " ஒரே ஒரு மகனென்று பாராட்டி சீராட்டி வளர்த்தேன். அவனோ இப்போ பொண்டாட்டி தாசனாயிட்டான். இப்பவே அவள் சொல்ல கேட்கிறவன், இனி நம்ம வீட்டுக்கு நம்ம பிள்ளையா வரமாட்டான். ", என்று எண்ணியது.

இருந்தாலும் ஜெகன் சந்தோஷமாக இருக்கட்டுமென்று மனதைத் தேற்றிக் கொண்டார் காயத்ரி அம்மா.
புதுவீட்டில் நுழைந்த தம்பதியர் பால் காய்ச்சினார்கள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Dec-17, 11:13 pm)
பார்வை : 347

மேலே