ஓர் பெண்ணின் விவாகம்ரத்து

விதியினில் ஆடிடும் பொம்மை அவள்!
மதி, அதன் சதி..
அறியாமல் சிரித்திடுமே!
உறவுகள் உணர்வின்றி,
உரிமைகள் உறங்கிடுமே!
கனவாய் காதல் கலைந்திடும்..
கலைந்ததும் காதல் கனவாகிடுமே!

பிரிவோம் என்று தெரியாமல்
புதிதாய் ஓர் பந்தம்..
பந்தம் என்று தெரிந்தும்
பிரியும் ஒர் பரிதாபம்!

ஊருக்கான ஒரு முடிச்சு..
உனக்காகும் வெறும் முடிச்சு..
உரக்கச் சொன்னாலும், அது வீண் பேச்சு!
இழக்க இனி ஏதும் இல்ல..
இறந்தது காலம் மட்டும் அல்ல..
அவள் கனவும் தான்!

(உயிர் வரிசை)

அடுத்தவர் அறிவுரைகளில் - நீ
ஆழ் கடலில் மூழ்கி
இழந்ததை இகழ்த்தி..
ஈவதை உயர்த்தி வாழ கற்றுக் கொள்.
உன்னை
ஊரார்,
எட்டிப் பார்த்து
ஏளனம் செய்யும்
ஐய்யத்தில்,
ஒருநாள்..
ஓலமும்
ஔபாசனம் செய்யும்,
அஃதே உன் வாழ்வும் முடியம்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (14-Dec-17, 8:34 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 539

மேலே