உன்னைப்போல் இல்லை

இயற்கையை வரைந்தேன்
உன்வடிவத்தைப் போல் இல்லை ,
கவிதைகளைப் படித்தேன்
உன்கடிதத்தைப் போல் இல்லை !
நிழலைப் பிடித்தேன்
உன்விரல்களைப் போல் இல்லை ,
இன்பத்தை அனுபவித்தேன்
உன்அன்பைப் போல் இல்லை !
குடிநீரைக் பருகினேன்
உன்எச்சிலைப் போல் இல்லை ,
தாகத்தை தீர்த்தேன்
உன்முத்தங்களைப் போல் இல்லை !
பெண்களைப் பார்த்தேன்
உன்அழகைப் போல் இல்லை ,
மனதில்காதலை வளர்த்தேன்
உன்காதலைப் போல் இல்லை !