காதல்
கண்களின் பார்வை ஒன்றே
போதுமடி அது என்ன
நேசம் கோரும் பார்வையா
இல்லை,' நீ யாரடா இப்படி
என்னை பார்க்கிறாய்'என்று
தெறிக்கும், கனல் விழிப் பார்வையாஎன்று,
உன்னை நான் முதல் முதலாய்ப்
பார்த்தபோது உன் பார்வை என்மேல்
விழுந்ததை நான் இன்னும் மறக்கவில்லை
அது மயக்கும் பார்வை என்னை
உன்னிடம் ஈர்த்த பார்வை உந்தன்
காதல் பார்வை, நம்மை சேர்த்துவைத்த
அந்தப் பார்வை நான் மனதில்
பதித்துவைத்த உந்தன் பார்வை