பேபி கவிதை

என் செல்ல பாப்பாவுக்கு

உன் அழகைக் கண்டு மயங்கும் கண்களுக்கு
ஏனோ உறங்க மனமில்லை

உன் மழலையைக் கேட்டு மயங்கும் செவிகளுக்கு
ஏனோ மெல்லிசை மீது நாட்டமில்லை

உன் வாசத்தை நுகர்ந்து மகிழும் மூக்கிற்கு
ஏனோ பூக்களின் வாசம் பிடிக்கவில்லை

உன் புகழைப் பேசி மகிழும் நாவிற்கு
ஏனோ அமைதியின் அர்த்தம் புரியவில்லை

உன்னைத் தழுவிக் கொஞ்சும் கைகளுக்கு
ஏனோ தங்கக் காப்பு பிடிக்கவில்லை

உன் பின்னால் ஓடி ஆடும் கால்களுக்கு
ஏனோ ஓய்வெடுக்க விருப்பமில்லை

உன்னை எந்நேரமும் சுமக்கும் இதயத்திற்கு
ஏனோ நீ பாரமாய்த் தோன்றவில்லை

எழுதியவர் : (15-Dec-17, 10:53 am)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : baby kavithai
பார்வை : 1878

மேலே