நீதி பாகம் ஒன்று
நீதி என்பது
சட்டத்தின் அடிப்படையில்
குற்றத்திற்கு ஆதாரங்கள்
கண்ணால் கண்டா சாட்சிகள்
காதால் கேட்ட வசனங்கள்
என்று இவற்றின் அடிப்படையில்
விசாரணை நடத்தும்
நீதிபதியால் வழக்கின் முடிவில்
வழங்கப்படுவது , இதை
எல்லோரும் அறிவோம்
பண பலத்தாலும், மிரட்டலால்
சாட்சிகள்,ஆதாரங்கள்
உருகுலைவதுமுண்டு , அப்போது
வாதாடும் சட்டநிபுணர்
தன கட்சிக்காரருக்கு சாதகமாய்
சட்ட நுணுக்கங்கள் துணையோடு
குற்றமே செய்த ஒருவரை
நிரபராதியாய் மாற்றமுடியும்
இங்குதான் பொய் மெய்யாகும் மாயை
இது காலங்காலமாய் நடந்துவருவது
பொற்கொல்லன் பொய்யாய் வாக்கு கூற
மாமன்னனும் அதை மெய் என்றேற்றி
கோவலனை சிரச்சேதம் செய்ததை
செப்புகின்றது சிலப்பதிகாரம்
இன்றும் இந்த இருபத்தியொன்றாம்
நூற்றாண்டிலும் சட்டத்திற்கு
தெரிந்ததெல்லாம் ஆவணங்கள், அத்தாட்சிகள்
இவை இல்லை எனில் சட்டம்
ஒரு இருட்டறையாகி ,நீதி
மகுடம் இழந்து , தடம் புரண்டிடும்
குற்றமற்றவன் குற்றவாளியாவான்
குற்றவாளி, நிரபராதியாகி
தலை நிமிர்ந்து செல்வான்
இது நாம் எல்லாரும் அறிந்ததுதான்