இறைவன்

கடவுளுக்கு மனிதனாய் அவதரித்து
மனிதர்களிடையே மாமனிதனாக
இருந்து மனிதர்களே இவர்தான் கடவுளோ
என்று தானே நினைத்து கடவுளை
காண வைக்கிறான் கடவுள்
யுகங்கள்தோறும் அவதரித்து
வஞ்சகரை தண்டித்து நல்லோரைக் காத்த
மானிடர், ராமன், கிருட்டிணன்,
இன்னும், புத்தனும், ஏசுவும்,
பின்னே நபிகளும், குரு நானக்கும்
இப்படி மானிட உருவத்தில் அடிக்கடி
படைத்தவன் தோன்றி மறைவதின்
மர்மம்தான் என்ன ? அவனுக்கு
பிடித்த உருவம் அவன் படைப்பில்
இந்த மனித வடிவமோ ? இல்லை
ஒளிமையமாய் இருந்துகொண்டு
வேண்டும் போது எவ்வுருவமும்
மாற்றிக் கொள்ளும் சித்திகள்l தெரிந்த
மாபெரும் சக்திதானோ
எப்படியேனும் இறைவன்
மானிடனாய்ப் பிறந்து,வளர்ந்து
மானிடர் தெய்வமாய் தொழுதது
சரித்திரம்,இதிகாசம்,புராணம்
இதற்குமேல் என்ன ஆதாரம்
அத்தாட்சி வேண்டும் சொல் மனிதா
'அவனை' நேரில் கண்டாரும் உள்ளாரா
என்ற கேள்விக்கு ; கேள்விக்குளேயே
பதிலிருக்கு, தொக்கி , அதுவே
ஆம் ' உள்ளான்' என்று.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Dec-17, 3:49 pm)
Tanglish : iraivan
பார்வை : 105

மேலே