சட்டம் யார் கையில்

சட்டம் இப்போதெல்லாம்
யார் கையில் என்று கேட்டால்
இப்போதெல்லாம் அது
பையில் பணமும் கையில்
அடியாட்கள் பலமும் உள்ளோரிடம்
செய்வதறியாது ஒளிந்து கொண்டுவிட்டது !
நீதி தேடி நீதிமன்றம் தேடி
அலையும் எளியோர்க்கு நீதி
கிடைப்பது அங்கு நீதி மன்றத்தில்
வாதாடும் வழக்கறிஞர் கையில் !
சட்ட நுணுக்கம் தெரிந்து வாகு திறமை
இவரிடம் இருந்தாலும், ஆதாரங்கள்
குற்றத்தின் அடிப்படை, அழிக்கப்பட்டால்
சாட்சிகள் உண்மைக்கூற மறுத்தால்
நீதி தேவதை கண்கள் மறைக்கப்பட்டுவிடும்
நீதி தேடி அலைவோருக்கு நீதி கிடைப்பதில்லை
மாறாக , குற்றவாளி நிரபராதி ஆகிவிடுவான்
அங்கு நீதிபதி, அவர் என்ன செய்ய முடியும்
சட்டத்தில் ஆதாரங்கள், சாட்சி இல்லை என்றால்
நீதியும் மாறிவிடும்!
நீதிபதிக்கு எதிரில் ஒரு' சட்டத்திற்குள்ளே'
' அடைபட்டுக்கிடக்கும்' சட்டம் இயற்றியவர்
நீதிபதியை பார்த்து கண்ணீர்விடுவார் !
நீதிக்கு நேர்மை, சட்டத்தின் உள்ளே!

சட்டம் இன்று பணப்பையும்
அடியாட்கள் பலமும் உள்ளார்
கையில் பாவம் ஒளிந்துகொண்டிருக்கிறது!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Dec-17, 7:13 pm)
Tanglish : sattam yaar kaiyil
பார்வை : 83

மேலே