வெயில்
வறண்ட மண்ணை
வறண்ட நெஞ்சை
மீண்டும் மீண்டும்
வாட்டத்தான் வருகிறதோ வெயில்..
வாடிய பயிரை
வதங்கிய உயிரை
மீண்டும் மீண்டும்
கருக்கத்தான் வருகிறதோ வெயில்..
ஆடிய பொழுதுகள்
பாடிய கணங்கள்
அத்தனையும் பெய்யாத மழைத்துளிக்குள்
ஒளிந்து கொண்டு உள்ளது...
ஏதும் தெரியாதது போல்
இந்த வெயிலோ
வருத்தங்களை மட்டுமே
சுமந்து வந்து நம் பக்கம் சேர்க்கிறது
வெயில் தரும் சூட்டை விடவும்
நம் இதயத்தில்
ஆயிரம் வலிகளின் சூடு
மிக வலிமையாய் உள்ளதென்பது
வெயிலுக்கெங்கே தெரியப்போகிறது....!!!