உன் கைகளில்

என்ன சொல்ல
சொல்ல நினைப்பதை எப்படி
சொல்ல என யோசனையிலே
நாட்களை கழிக்கிறேன்

எனக்கு உன்னை புடிச்சிருக்கு
இல்ல,இப்படி வேண்டாம்
நான் உன்ன லவ் பண்றேன்
ம்..ம்.. வேற விதமா....
ஐ லவ் யூ இப்படி பல விதமா
சொல்லி பார்க்கிறேன்
கண்ணாடி முன்னயும்
எனக்குள்ளயும்.

தூக்கங்களை இழந்து
தூண்களில் சாய்ந்து கிடக்கும்
என்னைப் பார்த்து ஏதோ
நேர்ந்து விட்டதாக நினைத்து
சிரித்து செல்கிறார்கள்
பார்ப்பவர்கள்

மனசுல எழுகிற ஆசைகளை
காகிதத்துல எழுதுறேன் நீ
காதல் சம்மதம் தந்ததும்
உன் கன்னக்குழிய நிரப்ப.

மனதில் பாரம் காதல் எனக்கு
ரொம்ப தூரம் இந்நிலமை
ஒருநாள் மாறும் என் இதயமும்
உன் கைகளில் ஒருநாள்
வந்து சேரும்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (24-Dec-17, 1:24 am)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : un kaikalil
பார்வை : 539

மேலே