தாய் எனும் தனிப்பெரும் தெய்வம்

தெய்வமே பிறக்கின்றது
தாயின் வயிற்றில் -என்ன
தவம் செய்தாளோ தாய்!
பெண்ணைப் படைத்த இறைவன்
பெண்ணில் தான் பிறந்து
பெண்ணை தாயாக்கி
தாயே தெய்வம் என்று
வையகத்திற்கு விளக்கினானோ
அன்று நாரணனும் கண்ணனாய்
மாமகள் தேவகியின்
திருவயிற்றில் தோன்றினான் ;
இதை கூறும்போது ,
செப்புகின்றாள் ஆண்டாளும்,
தான் வடித்த 'திருப்பாவை'யில் ,
'தாயை குடல் விளக்கம்
செய்த தாமோதரன் என்று'
ஒருத்தி மகனாய்ப் பிறந்து
கண்ணனும் ,பின்னே ஒருத்தி
மகனாய் அன்னை யசோதை
மடியில் தவழ்ந்து வளர்ந்து
வளர்த்த தாயையும் தெய்வமாய்
உயர்த்தினான் என்று கூறுகின்றது
நமது புராணம் 'ஸ்ரீ பக்கவாதம்'
இப்படித்தான், தாயே ,
.................................................,


தாயே! எனக்கு பிறப்பு தந்து
உலகில் தந்தைக்கும்
அறிமுகம் செய்துவைத்து
எனக்கு பெருமை! தந்து
என்னை வாழவைப்பதொன்றே
உன் வாழ்க்கையின் குறிக்கோளாய்
ஏற்று உனையே தியாகம்
செய்கின்றாய் , நீயே
எனக்கு தெய்வமென்று -அந்த
தெய்வமே காட்டி நிற்க
இன்னும் என்ன சொல்லவேண்டும்
தாயே இவ்வுலகில் நீ
ஒரு தெய்வமே தனிப்பெரும் தெய்வம் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Dec-17, 1:32 pm)
பார்வை : 81

மேலே