இதயக்கனிக்கு ஆத்ம சீடனின் கடிதம்
சீர்மிகு உன் கருத்துகளில் நான் உருவானேன்.
காலங்களில் மாறினாலும் தலைவா என்றிட நீ இருக்கிறாய் எனது இதயக்கனியாய்..
புரட்சிமிகு கருத்துகளால் என் இதயம் கவர்ந்தவனே,
உன்னை எதிர்த்தவரும் இதயத்தால் வாழ்த்தி,
உன் பிரிவால் கலங்கிட உனக்குக்கிணையாய் எத்தலைவனும் தமிழக வரலாற்றில் நான் கண்டதில்லை.
அண்ணலின் வழிவந்த அன்பு சிகரமே,
உன்னை நேரில் காணாவிட்டாலும் எம் உள்ளங்களில் வாழ்கிறாய்..
மக்கள் திலகமாய் திகழ்ந்த உன் பெயரில் கயவர்களும் நீயாக முயற்சிக்கிறார்கள்.
காலம் தரும் அவர்களுக்கு பெரும்தோல்வி என்னும் பரிசு..
கட்சியும் வேண்டாம்.
பதவியும் வேண்டாம்.
உன் கருத்துகள் போதும்..
தமிழ் பற்று போதும்..