உலகாய்வு - சி எம் ஜேசு

இந்த பிரபஞ்சத்தில்

அணு எனும் எலக்ட்ரான்
புரோட்டான் நியூட்ரான்

உடைந்து உயிர்களாகி
உலகினை தோற்றுவித்திருக்கிறது

உடைந்த இந்தணுவினை
ஒட்டவைக்க தேவை 12 துகள்கள்

இத்துகள்களில்
11 ஐ கண்டு பிடித்த அறிவியல்

12 வதையும்
கண்டறிந்துள்ளது அது கடவுள்
துகளேனும் காட்ஸ் பார்டிகிள்

ஈரம் கொண்ட தினைமாவை
உள்ளங்கையில் வைத்து உருட்டி

உருண்டை செய்வதை போன்றே
துகள்கள் 12 - ஐ வைத்து

ஓர் அணுவினை ஓட்டிப்பார்த்தால்
என்ன கிடைக்கும் எனும் ஆய்வுகளில்
இன்றைய அறிவியல்

அறிவு மேலோங்கிட
முயன்று பார்ப்போம்
ஆண்டவன் கண்களுக்கு
தென்படுகிறானா என்று

வாழ்த்துக்கள்
அறிவியல் விஞ்ஞானிகளுக்கு

எழுதியவர் : சி .எம் .ஜேசு பிரகாஷ் (26-Dec-17, 11:44 am)
பார்வை : 96

மேலே