காதல் மயக்கம்
மார்கழி நிலவாய் இரவில் வந்து,
காதல் மயக்கம் எனக்குள் தந்து,
அறியா பிள்ளை போல், அருகில் நிற்கிறாய் அமைதியாக.
பாசக்காரி, பாசாங்குக்காரி,
இரவிலும் மின்னும் மாயக்காரி,
என் பக்கம் வாயேன், அன்பின் அர்த்தம் காண.
ஒரு முத்தம் தாயேன், நானும் நித்தம் வாழ.