ஓர் நாள் கூத்து-01

வெல்வெட் பூச்சி:-

வீதியிலே இவள் பவனி வந்தால்

பட்டுடுத்தி நெற்றியிலே குங்குமமிட்டு,

புருவத்திற்கு மை பூசி,

இதழுக்கு வண்ணமிட்டு,

கழுத்தில் ஜோலிக்கும் நகையுடன்,

கைகளில் வளையல் ஓசையோடு,

கால் கொலுசு சினுங்கிட,

மங்கை அவள் பவனி வந்தாலும்,

பொய்த்திடும் இவள் முன்னே...

ஆண்டுகளில் உயிர்த்திருந்தால்

இவள் அழகில் ஆண்களுக்குள் மோகமும்,

பெண்களுக்குள் அழகு போர்மூண்டு,

பூமியில் சஞ்சலங்கள் முழுமோயென

சிறு பொழுதில் வாழ்ந்து செல்ல

பிரமன் வரம் கொடுத்தானோ...

மழைக்குக் கூட இவள் மீது மோகக் காதல்

எங்கு இவள் அழகில்

மதி மயங்கி கொட்டாமல்

அழகு மேனியை ரசித்துச் செல்லவே

சிலப் பொழுதுகளில் பொழிகிறான்

தன் மோகத்தைக் காதல் துளியாய்...

என்னவள் அருகே இருந்தும்

இவள் அழகில்

மனம் மோகத்தில் விழுந்ததும் உண்மையே...

-அ.பெரியண்ணன்

எழுதியவர் : அ.பெரியண்ணன் (28-Dec-17, 7:32 am)
பார்வை : 90

மேலே