சுமைகளும் சுகங்களும்
கடந்தகால சுமைகள்
எதிர்கால சுகங்களானால் நன்று..
கடந்தகால சுகங்கள்
வருங்கால சுமைகளாகாமலிருந்தால் நன்று..
சுமைக்குப் பின் வரும் சுகம் ஆனந்தம்
இமைக்குள் நீர் தரும் சுமை கஷ்டம்
விருப்பம் கொள்வதென்பது என்னவோ சுகத்திற்கே
விரும்பி சேர்வது என்னவோ சுமையே யாவர்க்கும்..
சுமையும் சுகமும் வண்டிச்சக்கரம் போல
மாறி மாறி வர
வாழ்க்கைப் பயணம் முன்னோக்கி
சென்று கொண்டே இருக்கும்..
சுமையை நினைத்து கலங்கி நின்றால்
உலக ஓட்டப்பந்தயத்தில்
நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டே இருப்போம்..
முள் குத்தக் குத்த முயன்றால் தான் மலர் கிடைக்கும்
மணம் கிடைக்கும்
முள்ளுக்குப் பயந்தால்
தள்ளிவிட்டுச் சென்றுவிடும் நடுவழியில்
கிள்ளிவிட்டுச் சென்றுவிடும் அழும்வரையில்
ஆறுதல் கூறக்கூட யாருமில்லாத
இந்த நாகரீக உலகத்தில்
எதிர்த்து போராடுபவனே ஜெயிக்கிறான்
வானம் தொட்டு
வானவில் தொட்டு குதிக்கிறான்..
சிகரம் பல எட்டுகிறான்..
சிரிப்பினை தினமும் கொட்டுகிறான்...