உன் பிறந்தநாளன்று

அந்தி மந்தாரை பூவொன்றை ஏந்தி நிற்பேன்!
ஆத்தங்கரை மரங்களையெல்லாம் ஆட
‍‍‌வைப்பேன்!
இமை கொண்ட மீன் கண்களுக்கு
ஈராயிரம் மிருதங்கம் கொண்டு வாசிப்பேன்!
உச்சி வகுடெடுத்த உன் ஜடையோரம்
ஊஞ்சலாட மதுரை மல்லிகையை மாட்டிவிடுவேன்!
எட்டி விளையாடும் உன் கால்களுக்கு
ஏக்கம் கொண்ட கொலுசுகளை கட்டி விடுவேன்!
ஐந்து பெருங்கடலையும் சுத்தி வர
ஒரு டைட்டானிக் கப்பலில் கூட்டிச் செல்வேன்!
ஓடி வரும் காட்டாறையெல்லாம் உனக்கு பிறந்தாள் வாழ்த்து சொல்ல அனுப்பி விடுவேன்!

உன் பிறந்தநாளன்று!

எழுதியவர் : மணிபாலன் (29-Dec-17, 7:45 pm)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 6779

மேலே